Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

தமிழ் எண்களை இன்றும் நாணயத்தாள்களில் அச்சிட்டு வரும் உலகிலேயே ஒரே நாடு!!


தமிழ் எண்களை நாணயத்தாள்களில் அச்சிட்டு தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டும் நாடு உலகத்திலேயே ஒன்று தான்.

ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய வரி வடிவ எண்களைக் கொண்டுள்ளன ஆனாலும் இலக்கங்களையே அதிகமாக பாவனையில் கொண்டுள்ளன.

எனினும் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான மொரிசியஸ் இன்றும் தன் நாட்டு நாணயத்தாள்களில் தமிழ் எண்களை அச்சிட்டு வருகின்றது.

உலகில் இந்த நாட்டு நாணயத்தாள்களில் மட்டுமே தமிழ் எழுத்துக்களும் எண்களும் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள் வாழ்கின்றதாக கூறப்படுகின்றது. தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

மேலும் தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.


இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில மொழிகளில் மட்டுமே வரி வடிவ எண்கள் இன்றுவரை பாவனையில் இருக்கின்றன. அப்படியாக தமிழ் மொழியின் எண்கள் இன்று வரை உலகின் எங்கோ ஓர் இடத்திலாவது பாவனையில் இருக்கின்றது என்பது சிறப்பானதாகும்.
 
உலகிலேயே கவர்ச்சியான பாட்டி இவர் தான்: வயது என்ன தெரியுமா?


உலகிலேயே கவர்ச்சியான பாட்டி எனக் கருதப்படும் பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

செர்பியா நாட்டை சேர்ந்த Zaklina என்ற பெண்ணிற்கு 47 வயதாகிறது. இவருக்கு 28 வயதில் ஒரு மகளும், இரண்டு பேத்திகளும்(படத்தில் உள்ள குழந்தைகள்) உள்ளனர்.

உடல் அழகை பராமரிப்பதில் அதீத ஆர்வம் உடைய இவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய கவர்ச்சியை காட்டும் வகையில் வித விதமான உடைகளை உடுத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதுமட்டுமில்லாமல், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், போலந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் இந்த நாடுகளில் பின்பற்றப்படும் உடை அலங்காரங்களை இவரும் பின்பற்றி தனது அழகை வெளிப்படுத்துகிறார்.

சமூக வலைத்தளமான டுவிட்டரில் இவரை தற்போது 1,57,000 பேர் பின் தொடர்கின்றனர்.

இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு அவர்களது நண்பர்கள் விமர்சனம் எழுதி அவரை உலகளவில் பிரபலமான அழகியாக வெளிக்காட்டி வருகின்றனர்.

இது குறித்து அவர் பேசியபோது, ’அழகு மற்றும் கவர்ச்சி என்பது பெண்களிடம் எந்த வயதிலும் நீடித்திருக்கும். இதற்கு நமது உடலை சரியாக பராமரிக்க வேண்டும்.

உடலமைப்பிற்கு ஏற்வாறு ஆடைகளை தெரிவு செய்ய வேண்டும். இவ்வாறு பின்பற்றி வந்தால் எந்த வயதிலும் கவர்ச்சியாக ஜொலிக்கலாம்’ என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!


டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.

இதற்கு முன்னர் அதிவேக பொலிஸ் காரினை வைத்திருந்த பெருமையினை இத்தாலிய பொலிஸார் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகமே போற்றும் விஞ்ஞானியான இந்த சாதனை தமிழர் பற்றி தெரியுமா?


மயில்சாமி அண்ணாதுரை - இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

கடந்த மாதம் இஸ்ரோ 104 செயற்கை கோள்களை விண்வெளிதளமான ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியது.

கடந்த 2008ல் சந்திரனுக்கு சந்திராயான் 1 ராக்கெட் அனுப்பப்பட்டது. பின்னர் 2013ல் செவ்வாய்க்கு மங்கல்யான் அனுப்பப்பட்டது.

இந்த மூன்றும் விண்வெளி துறையில் மிக பெரிய சாதனையாக கருதப்படும் வேளையில் இம்மூன்றின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றியவர் தான் மயில்சாமி அண்ணாதுரை.

இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக விளங்கும் 58 வயதான மயில்சாமி அண்ணாதுரை இந்த இடத்துக்கு சாதரணமாக வந்து விடவில்லை.

அண்ணாதுரை கோயம்பத்தூரில் உள்ள கோத்தவடி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவர் தந்தை மாதம் 120 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஆசிரியராக இருந்தார்.

அண்ணாதுரையுடன் சேர்த்து அவர் தந்தைக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். இவர் தான் அதில் மூத்தவர்.

ஆசிரியர் பணியில் வரும் சம்பளம் பத்தாததால் அண்ணாதுரையின் தந்தை துணி தைக்கும் தொழில் இடையில் செய்து வந்தார். அதில் மாதம் 100 ரூபாய் வருமானம் வந்தது.

பள்ளிக்கூடம் முடிந்து வரும் வீட்டுக்கு வரும் அண்ணாதுரை தந்தையின் தையல் தொழிலுக்கு உதவிகளையும் செய்து வந்தார்.

இந்த ஏழ்மையிலும், அண்ணாதுரை படிப்பில் கெட்டிகாரராக விளங்கினார். எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாக வந்த அவர் பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றார்.

பின்னர் PUC படிப்பிலும் கல்லூரியிலேயே முதல் மாணவராய் வந்தார். பின்னர் அரசு கல்லூரியில் பி.இயும், PhD படிப்பை அண்ணா பல்கலைகழகத்திலும் அவர் முடித்தார்.

பின்னர் தனக்கு விருப்பமான விண்வெளி துறையை தேர்ந்தெடுத்து உலகம் போற்றும் விஞ்ஞானியாக இன்று திகழ்கிறார்.

அண்ணாதுரை பகவத்கீதையில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியத்தை தான் வேதவாக்காக பின்பற்றுகிறார்.

உங்கள் கடமையை தொடர்ந்து செய்யுங்கள், வெகுமதி தானாக வரும்!

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஒரு தமிழன்!


2017ஆம் ஆண்டுக்கான உலக அளவில் இருக்கும் கோடீஸ்வரர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார்.

அவர்தான் 102ஆவது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ நாடார் தனது பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர் படிப்பை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.

இதன்பிறகு கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு, டாக்டர் பட்டமும் பெற்றார்.

டி.சி.எம். நிறுவனத்தில் மிகக் கடுமையாக வேலை பார்த்து, அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திய அளவில் புகழ்பெற்றார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சொந்தமாக பிஸினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் டி.சி.எம். நிறுவனத்தை விட்டு விலகினார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஐந்து பேரை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

1983இல் ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு கம்ப்யூட்டர் தொடர்பான உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வகையில் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்து விற்கத் தொடங்கினார். ‘பிசிபீ’ (சுறுசுறுப்பான தேனி) என்று தனது கம்ப்யூட்டருக்குப் பெயர் வைத்தார். கம்ப்யூட்டர் விற்பனை இந்தியாவில் சூடு பிடிக்கவே, 1987-ல் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் விற்பனை நூறு கோடி ரூபாயைத் தொட்டது.

1991இல் நரசிம்மராவ் பிரதமரானபிறகு தாராளமயமாக்கல் கொள்கை வரவே, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படத் தொடங்கும் வாய்ப்பு ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு கிடைத்தது.

அமெரிக்காவின் ஹெச்.பி. நிறுவனத்துடன் இணைந்து புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சியால் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டதோடு, நாற்பது துணை நிறுவனங்கள் கொண்ட அமைப்பாகவும் மாறியது.

இந்த நாற்பது நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, ஐந்து முக்கிய நிறுவனங்களாக மாற்றினார் சிவ நாடார்.

2004இல் ஐந்து நிறுவனங்களாக இருந்த நிறுவனத்தை ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் என இரு பெரும் நிறுவனங்களாக மாற்றினார்.

இன்றைக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது.
மலேசிய வாழ் தமிழரும், பெரும் செல்வந்தருமான ஆனந்த கிருஷ்ணன், போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்.2,043 பெரும் கோடீஸ்வர்களில் 219 வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்தின் மதிப்பு $6.5 பில்லியன்கள்.

ஆனந்த கிருஷ்ணனின் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் மற்றும் எண்ணெய் வயல் சேவைகளை வழங்கும் பூமி அர்மாடாவின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, மலேசியாவின் இரண்டாவது செல்வந்தர் என்ற இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டார்.

16.2% மேக்சிஸ் பங்கு விற்பனையில் குழப்பம் இருப்பதாக செளதி தொலைதொடர்பு நிறுவனம் கூறுகிறது. ஆனந்த கிருஷ்ணன், ஹாவர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ படித்தவர். தாய்லாந்தில் வசித்து வரும் அவரது ஒரே மகன் புத்த மதத் துறவியாக மாறிவிட்டார்.

இதேவேளையில், 27.6பில்லியன் டாலர்களாக இருந்த சொத்துக்கள் 72.8பில்லியன் டாலர்களாக அதிகரித்து அமேசான் நிறுவனர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்ப் ஐந்தாவது இடத்திலும், ஆரக்கல் துணை நிறுவனர் லார்ரி எல்லிசன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்

இந்த ஆண்டு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ளது.இந்த பட்டியல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த அளவு எண்ணிக்கை உயர்ந்துள்ளது 31 வருடங்களில் இதுவே முதல்முறையாகும்.

இந்த பட்டியலில் அமெரிக்க பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 565 ஆக உள்ளது இதற்கு காரணம் டிரம்ப் நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

319 எண்ணிக்கையில் சீனா இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி 114 எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் எண்ணிக்கை 202லிருந்து 227 ஆக உயர்ந்துள்ளது, மொத்த பெண்களின் சொத்து மதிப்பு 852.8பில்லியன் டாலர்களாக உள்ளது.

இரண்டாம் வருடமாக லாரியல் அழகு சாதன நிறுவனத்தின் வாரிசு 39.5பில்லியன டாலர்கள் சொத்து மதிப்புடன்,

•கடந்த 23 வருடங்களில் 18வது முறையாக பில்கேட்ஸ் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

•இந்த வருடம், 195 பேர் புதியதாக இடம் பிடித்துள்ளனர் குறிப்பாக சீன பெருநிலப்பரப்பிலிருந்து அதிகம் பேர் இடம் பிடித்துள்ளனர்.

•20 வயதாகும் அலெக்சாண்டரா ஆண்டர்சன் இந்த பட்டியலில் இடம் பிடித்த இளம் வயது நபர் ஆவார்.

•சுய முயற்சியில், பணக்காரராக, "ஸ்டிரைப்" என்ற இணைய வழி பணம் செலுத்தும் வலைத்தளத்தை நிறுவிய 26 வயது ஜான் கோலிசன் இடம் பெற்றுள்ளார்.

•இந்த பட்டியலில், சுய முயற்சியில் பணக்காரர்களில் புதிதாக வந்த பெண் தாய்-லி ஆவார். குழந்தையாக இருக்கும் போது அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது எஸ் எஸ் ஐ என்னும் நிறுவனத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

- Vikatan-

700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவரின் முகம் மீண்டும் வடிவமைப்பு : ஆராய்ச்சியாளர்கள் சாதனை


பிரித்தானியாவில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தவரின் முகத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள Cambridge நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை உள்ளது.

இதன் பின்புறம் உள்ள கல்லறையில் 13ஆம் நூற்றாண்டில், அதாவது 700 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட ஒருவரின் எலும்புகூட்டை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

அதற்கு அவர்கள் Context 958 என பெயரிட்டுள்ளனர். Context 958ன் எலும்பை வைத்து முக புனரமைப்பு தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் முதத்தை வடிவமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து Cambridge பல்கலைகழக பேராசிரியர் John Robb கூறுகையில், Context 958 நபரின் முகத்தை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளோம்.

அவர் தனது 40 வயதில் மரணமடைந்துள்ளார்.

அவர் எலும்புகள் வலுவாக உள்ளன. அவர் நன்றாக உழைப்பவராக இருக்க வேண்டும். உடல் நிலை கோளாறு காரணமாக Context 958 இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தங்கள் ஆராய்ச்சி தொடரும் எனவும் John தெரிவித்துள்ளார்.

துபாயில் ஒரு பர்கரின் விலை 6.54 லட்சம்....


உலக பணக்கார நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே அதிக மதிப்புடைய 7 அடுக்குடைய பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.

Dubai lifestyle magazine Villa 88 என்ற இதழின் நிறுவனர் Asma Al Fahim என்பவர், புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பர்கரை தனது ராயல் குடும்பத்தினருடன் சேர்ந்து தயாரித்துள்ளார்.

துபாயில் உள்ள Dubai Mall's Galeries Lafayette எனும் மாலில், இந்த பர்க்கர் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதன் விலை 6.54 லட்சம் ஆகும். இதற்கு முன்னர் $7,000 தொகையில் பர்க்கர் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக விலையுயர்ந்த சீஸ், மற்றும் குங்குமப்பூ சேர்த்து மொத்தம் 7 அடுக்குகளில் இந்த பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பர்கர் ஏலத்தில் விடப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாயை, புற்றுநோய் விழிப்புணர்வுக்கு பயன்படுத்தவிருப்பதாக Asma Al Fahim தெரிவித்துள்ளார்.


தூங்கினால் சம்பளம் ரூ.9 லட்சம்! எந்த நாட்டில் தெரியுமா?


பிரபல ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று தூங்கும் வேலைக்கு 9 லட்சம் சம்பளம் வழங்குவது இணையத்தில் பயங்கர பிரபலமடைந்து வருகிறது.

சீனாவின் நாவ் பாய்ஜின் என்ற உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமே இந்த அரிய வாய்ப்பை வழங்குகின்றது.

இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள்.

நிறுவனம் தயாரிக்கும் புதிய ஊட்டச்சத்துப் பொருளை உட்கொண்டு, அது தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சோதிக்க வேண்டும்.

பின்னர், அது குறித்த அறிக்கையை நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது, குறித்த வேலை இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது.


Photos