மன்னார் மடு கல்வி வலயத்திலுள்ள 11 பாடசாலைகளில் இன்று முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என மடு கல்விப்பணிபாளர் அறிவித்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் கடந்த 22ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டதையடுத்தே மேற்படி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், மாந்தை, கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கல்வி நடவடிக்கைகள் கடந்த 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதெனவும் கூறப்பட்டுள்ளது.மீள்குடியேற்றப்பட்ட மக்களிடையே உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அடையாளங்காணும் நடவடிக்கைகள் கடந்த தினங்களில் நடைபெற்றதாவும் இதன்படி முதற்கட்டமாக சுமார் 59 ஆசிரியர்களின் பங்களிப்புடன் 11 பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம், அடம்பன் மத்திய மகா வித்தியாலயம், அடம்பன் றோமன் கத்தோலிக்க வித்தியாலயயம், பாலைக்குளி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் பாலையடி, புதுக்குளம் தமிழ் வித்தியாலயம், பரம்புகடந்தான் தமிழ் வித்தியாலயம், வட்டக் கண்டல் தமிழ் வித்தியாலயம், பாப்பா மோட்டை வித்தியாலயம், பரப்பான் கண்டல் தமிழ் வித்தியாலயம், சொர்ணபுரி முஸ்லிம் வித்தியாலயம் என்பவற்றில் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளன.மாணவர்களுக்கான சீருடைகள், புத்தகப்பை என்பன கிடைத்துள்ளதோடு 2010ஆம் ஆண்டுக்கான பாடப் புத்தகங்களும் கிடைத்திருப்பதாகவும் வலயப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment