மன்னாரின் எண்ணெய் வளத்தின் மீது இந்தியாவின் அம்பானிக் குழுமம் ஆர்வம்
மன்னார் பிரதேசத்தின் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில் இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமான முகேஷ் அம்பானி குழுமத்தின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவின் திசாநாயக்க இன்று மும்பாய் பயணமாகவுள்ளார். இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இலங்கையில் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிவருவதாகவும் அதற்கான எண்ணெய் ஆராய்ச்சிப் பகுதிகள் மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த பெற்றோலிய வளத்தை இந்தியாவிடம் கொடுப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் தவிர வேறொரு இந்திய நிறுவனத்துடனும் அமைச்சர் இன்று பேச்சு நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நன்றி -அதிர்வு
மன்னாரின் எண்ணெய் வளத்தின் மீது இந்தியாவின் அம்பானிக் குழுமம் ஆர்வம்
Reviewed by NEWMANNAR
on
September 15, 2009
Rating:
No comments:
Post a Comment