மன்னாரில் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நடுகை
நீதி மறுசீரமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாடிக் கட்டிடத்தினை திறந்து வைத்த பிரதம நீதியரசர் ஜெ.ஏ.என்.டி. சில்வா அவர்கள் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கான அடிக்கல்லினையும் குறித்த தினத்தில் நட்டுவைத்திருக்கின்றார்.
நீதிமன்ற வளாகத்தில் சுமார் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மேல்மாடிக்கட்டடத்தின் தளப்பகுதி, சட்டத்தரணிகளுக்கான நூலகம், ஓய்வு மண்டபம், ஆலோசனைக்கூடம் மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பவற்றை உள்ளடக்கியதாகவும் அதன் மேல்பகுதியில் நீதிமன்ற அலுவலகமும் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்ட நீதிபதி அ. யூட்சன் தலைமையில் இம்மாதம் 22ம் திகதி இடம்பெற்றிருக்கும் நிகழ்வில் நீதியரசர் ஜெ.ஏ.என். டி. சில்வா உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரதுங்க மற்றும் பாலபட்டம்பிட்டி ஆகியோரும் நீதியமைச்சின் செயலாளர் சுகத்த கே கமலத் ஆகியோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதே வேளை கொழும்பு மாவட்ட நீதிபதியும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் பிரதி செயலாளருமான முகமட் லவ்வார் தாகீர் உள்ளடங்களாக வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் மேல்நீதிமன்ற நீதிபதிகளான ஜே. விஸ்வநாதன், எஸ். தியாகேந்திரன் மற்றும் வவுனியா மாவட்ட நீதிபதி யு.பு. அலெக்ஸ்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் மன்னார் மற்றும் வவுனியா நீதி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதே வேளை மன்னார் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் இராணுவ கடற்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
படங்கள் :-அண்மையில் மன்னாரிற்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாடிக்கட்டடத்தினை திறந்து வைப்பதையும் மாவட்த்திற்கான மேல் நீதிமன்ற வளாகத்துக்கான அடிக்கல்லினை நட்டிவைத்து பின் திரைநீக்கம் செய்வதையும் தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட நீதிபதி அ. யூட்சன் உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
மன்னாரில் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நடுகை
Reviewed by NEWMANNAR
on
September 30, 2009
Rating:

No comments:
Post a Comment