கலைவாணியின் கடாட்சம் எம்மை கல்வியிலும் கலைகளிலும் மேம்படுத்தும்

இந்துசமய வழிபாட்டில் பல தெய்வ வழிபாடு சிறப்புமிக்கதோர் அம்சமாகும்.
ஆதிசங்கரர் இவ்வழிபாட்டினை சூரியன், கணபதி, சிவன், முருகன், திருமால் மற்றும் சக்தி ஆகிய தெய் வங்களை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடும் ஆறு வழிபாட்டு நெறிகளாக வகுத்துள்ளார். இவற்றில் சக்தியை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடும் நெறி "சாக்தம்'' எனப்படும். கலை மகள் வழிபாடு இச்சக்தி வழிபாட்டு நெறிக்குள் அடங்குவதொன்றாகும். "சரஸ்வதி" என்னும் திருநாமத்தால் விளங்கும் அருளன்னை பொதுவாகப் படைக்கும் தொழி லுக் குரிய பிரம்மாவின் உயிர்ப்பு ஆற்றலாகக் கருதப்படுகிறாள். சாக்தநெறி நூல்கள் தேவி பராசக்தியே சரஸ்வதியாகவும் ஏனைய சக்திகளாகவும் விளங்குகின்றாள் எனக் குறிப்பிடுகின்றன.
சைவசித்தாந்தமும் நாமகளை சிவசக்தியின் ஒரு கூறாகவே குறிப்பிடுகின்றது. வாணி 64 கலைகளுக்கு முக்கிய தெய்வமாகப் போற்றப்படு கிறாள். அறிவு, தூய்மை ஆகியவற்றின் இருப்பிடமாகக் கலைமகள் கருதப்படுவதால், வெள்ளாடையும் வெண்தாமரையும் அவளுக்கு உரியவை ஆகின. கலைத் திருமடந்தை வெள்ளைக் கலையுடுத்து வெண்தாமரைமீது வீற்றிருப்பாள். பின் வலக்கரத்தில் அட்ச மாலையும், முன் வலக்கரத்தில் வியாக்கியான முத்திரையும், பின் இடக்கரத் தில் வெண்தாமரையும், முன் இடக்கரத்தில் ஏட்டுச் சுவடியும் தாங்கியிருப்பாள்.
"நவ'' என்பது சிறப்பு வாய்ந்ததொரு சொல்லாகும். இதற்கு இரு பொருள்கள் உள்ளன. "ஒன்பது"என்பது இவற்றில் ஒன்று. "புதியது" என்பது மற்றொரு கருத்தாகும். எனவே நவராத்திரி என்பதை ஒன்பது இரவுகள் எனப்பொருள் கொள்வதுபோல புதிய இரவுகள் எனவும் பொருள் கொள்ள இயலும்.
இந்துமதத்தவர்களது வழிபாட்டு முறைகளில் இரண்டு இராத்திரிகள் அமைகின்றன. அவற்றில் ஒன்று சிவராத்திரி. மற்றையது நவராத்திரி.
ஒன்பது நாள் வழிபாடு அமைவதன் மூலம் சக்தியின் பெருமை உயர்ந்து அமைகின்றது.
உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் சக்தியையும் ஆன்ம ஒளியையும் கொடுக்கும் தாயின் வடிவான ஆதிபராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி என்பவற்றின் ஆதாரமாக விளங்கு கின்றாள். அவள் ஆன்மாவைக் கலந்து ஆதாரத்தில் நிலைத்துநிற்கும் நிலையை மூன்று சக்திகளாகப் பிரித்து அதனை ஒன்பது இரவுகள் வழிபாடு செய்வதையே நவராத்திரி என அழைக்கிறோம்.அந்தவகையில் ஆதிபராசக்தியை முதல் மூன்று நாள்கள் துர்க்கா வடிவமாகவும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமி வடிவமாகவும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி வடிவமாகவும் வீரம், செல்வம், கல்வி என்பவற்றை அருளும் அம்சங்களாக அவர்களைக் கொண்டு வழிபடுகின்றோம்.
நவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர் மிகுந்த பக்தி சிரத்தையுடன் இவ் ஒன்பது நாள்களும் தெய்வ சிந்தனையுடன் விரதத்தைக்கடைக் கொண்டால் துன்பதுயரங்கள் நீங்கி வாழ்வில் வளமும் மகிழ்வும் கிட்டப்பெறுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ஒன்பது தினங்களும் விரதம் அனுஷ்டிக்க இயலாதோர் கடைசி மூன்று நாள்களான புரட்டாதி மாதத்தின் ஸப்தம், அட்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாள்களில் விரதமிருந்து சரஸ்வதியின் அனுக்கிரகத்தைப் பெறுதல் சிறப்பாகும். அந்தவகையில் இன்றைய மகாநவமித் திதியன்று சரஸ்வதி பூசையின் நிறைவுதின மாகும்.
சரஸ்வதி பூசைத்தினமான இன்று என்றும் அழியாத காலத்தால் கூட அழிக்க இயலாத கல்விச் செல்வத்துக்கு அதிபதியாம் கலைகளுக் கெல்லாம் வித்தகியாம் சரஸ்வதியைத் துதித்து, அவளது அனுக்கிரகம் வேண்டி விரதமிருந்து கல்வியில், கலைகளில் எமக்கெல்லாம் மேன்மையும் வெற்றியும் அருளவேண்டி வழிபடுகிறோம். இது இந்து மதத்தவர் காலாதிகாலமாக கடைக் கொண்டுவரும் ஒரு தூய வழக்கமாகும். அந்தவ கையில், குறிப்பாக கல்வி முயற்சியில் ஈடுபட்டு வரும் நமது மாணவச் செல்வங்கள் இன்றைய தினம் சரஸ்வதியின் கடாட்சம் வேண்டி அவளை மனதில் இருத்தி வழிபாடு செய்து அவளருள் பெற்றுக் கல்வியில் சிறந்துஉயர்ந்து வாழ்வில் வளமும் புகழும் பெற முயல்தல் சாலச் சிறப்பாகும். குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையை நவராத்திரி தினங்களில் பாராயணம் செய்வதால் மாணவச் செல்வங்கள் கல்வியில் மென்மேலும் சிறப்பும் மேன்மையும் ஈட்டிட இயலும்.
சரஸ்வதி பூசை தினங்களில் மாணவச் செல்வங்கள் தமது புத்தகங்களைப் பூசையில் வைத்தும், தொழிலாளர்கள் தமது தொழில்சார் கருவிகளை வைத்தும் வணங்கி நாளையதினம் விஜயதசமியன்று அவற்றை எடுத்துப் பயன்படுத்துவது வழக்கம். அந்தவகையில் விஜயதசமி ஆயுதபூசை யெனவும் கொள்ளப்படுகிறது. விஜயதசமியில் புதிய வேலைகளை ஆரம்பிப்பதும், கல்வியை ஆரம்பிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு முறைப்படி ஏடு தொடக்குதல் என்ற வித்தியாரம்ப நிகழ்வும் சம்பிரதாயபூர்வமாக கடைக் கொள்ளப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும்.
விஜயம் என்றால் வெற்றி எனப் பொருள் படும். நவராத்திரியின்போது முறைப்படி விரதமி ருந்து மூன்று சக்தி வடிவங்களை மனதாரப் பூஜிப்போருக் குத் துணிவும், செல்வமும், கல்வியும் ஒருசேரக் கிட்டும் என்பது இந்துமதத் தத்து வமாகும். எனவே, "அகிலமதில் நோயின்மை, கல்வி, தனதானியம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு ,சந்தானம் வலிதுணிவுவாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய்'' என்ற அபிராமிப்பட்டரின் வேண்டுதலுக்கேற்ப இந்நவராத்திரி நாள்களில் சக்தியின் வடிவமாம் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை மன தாரத் துதித்து அவர்களது அருள்பெற்று உய் வோமாக! *
கலைவாணியின் கடாட்சம் எம்மை கல்வியிலும் கலைகளிலும் மேம்படுத்தும்
Reviewed by NEWMANNAR
on
September 15, 2009
Rating:

No comments:
Post a Comment