சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் அலுவலகத்தை மூட உத்தேசம்!
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகம் எதிர்வரும் நவம்பர் மாதம் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒரு வருட காலமாக மன்னார் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது, செஞ்சிலுவைச் சங்கம் மக்களுக்குப் பெரிதும் உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை, வவுனியாவிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து உதவி செய்து வருகின்றது.இறுதிக் கட்ட போர் சூழலையடுத்து, மனிதாபிமானப் பணிகளில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உதவி வழங்கும் பிரிவு பெரும்பணியாற்றி வந்ததாக அதன் இலங்கைத் தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் அலுவலகத்தை மூட உத்தேசம்!
Reviewed by NEWMANNAR
on
September 15, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 15, 2009
Rating:

No comments:
Post a Comment