20 வருடங்களுக்குப் பின்னர் மன்னார் - யாழ் பஸ் சேவை
23 November, 2009
கடந்த 20 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த மன்னார்- யாழ் பஸ் சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சேவையானது தினசரி மன்னாரிலிருந்து காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்படுவதாக மன்னாரிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மன்னாரிலிருந்து புறப்படும் இந்த பஸ் சேவையானது ஓமந்தை சோதனைச் சாவடியில் படையினரின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் ஏ9 வீதியூடான கிளிநொச்சி, ஆனையிறவைத் தாண்டி யாழ் நோக்கிய பயணத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.
மேற்படி பயணிகளும் தேசிய அடையாள அட்டையின் மூன்று போட்டோ பிரதிகளை காண்பித்து சோதனைச் சாவடிகளில் பதிவுகளை மேற்கொண்டபின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொழும்பிலுருந்து மன்னாருக்கான பஸ் சேவையும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment