அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 28,29இல் 'கல்வாரியில் கருணை மழை' பாஸ்கு நிகழ்வு _

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் மாலை 07.00 மணிக்கு 'கல்வாரியில் கருணை மழை' எனும் பாஸ்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஆசிர்வாதத்துடன் மன்னார் செபஸ்தியார் பேராலய பங்குத் தந்தை அருட்திரு எஸ்.கே. தேவராஜா அடிகளின் வழி நடத்தலின் கீழ் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இரட்சணிய வரலாற்றில் இயேசுவின் திருப்பாடுகளின் வரலாற்று நிகழ்வுகள் இதன்போது காண்பிக்கப்படவுள்ளது.

கலைஞர் என்.எம். பாலச்சந்திரனின் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த பாஸ்கு நிகழ்வில் மன்னார் செபஸ்தியார் பேராலய பங்கைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். ___
மன்னாரில் 28,29இல் 'கல்வாரியில் கருணை மழை' பாஸ்கு நிகழ்வு _ Reviewed by NEWMANNAR on October 18, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.