மன்னாரில் 28-11-2009 அன்று நடைபெற்ற ”நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற “நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழாவின் முதற்பிரதியை மன்னார் ஆயர் வெளியீட்டு வைக்க அதனை கலாபூசணம் செபமாலை (குழந்தை) பெற்றுக்கொண்டார்.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் உப தலைவர் ஜனாப் மக்கள் காதர் தலமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் கலைஞர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

சுமார் 40 வருடங்களுக்குப் பின் மன்னாரில் மீண்டும் உதயமாகியிருக்கும் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது நூல் வெளியீடாக “நெருடல்கள்” கவிதைத்தொகுப்பு இடம் பெற்றிருக்கின்றது.

இன, மத, பேதமற்ற வகையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்துப்பிரதேசங்களையும் அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியதான வலுவான ஒரு கலை இலக்கிய அமைப்பாக மன்னார் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் மன்னார் மாவட்ட தமிழ்ச்சங்கம் உதயமாகி இரண்டு மாதங்களை கடந்த நிலையில் அதன் தலைவரும் மன்னா கத்தோலிக்க மாதாந்த சஞ்சிகையின் பதிப்பாசிரியருமான அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளாரின் நெருடல்கள் கவிதைத்தொகுப்பு இன்று வெளிpடப்பட்டிருக்கின்றது.
மங்கல விளக்கேற்றலுடனும், தமிழ்த் தாய் வாழ்த்துடனும் ஆரம்பித்த கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆசி உரையினை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை நிகழ்த்தி கவிதை நூலினை வெளியிட்டு வைத்திருக்கின்றார்.
தலைமை உரையினை தமிழ் சங்கத்தின்; உப தலைவரும், தகவல் தொடர்பாடலுக்கான ஊடகவலைப்பின்னல் நிலையத்தின் ஆலோசகருமான சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜனாப் மக்கள் காதர் நிகழ்த்தியிருக்கின்றார்.
வரவேற்பு உரையினை “சங்கத்தின் செயலாளர், கவிஞர் வி.எஸ்.சிவகரனும், சிறப்பு உரையினை “ஞானோதயம்” இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் லெம்பட் அடிகளாரும் நிகழ்த்தியிருக்கின்றனர்.
கவிதை நூலுக்கான நயப்புரையினை கவிஞரும் ஆசிரியருமான தென் புலோலியூர் பராரதீஸ் நிகழ்த்த வாழ்த்துரைகளை மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜே துரம் மற்றும் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஆபேல் றெவ்வல் ஆகியோர் நிகழ்த்தியிருக்கின்றனர்.
பெருமளவிலான இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள், சுவைஞர்கள், பொதுமக்கள்; கலந்து கொண்ட நிகழ்வில் ஏற்புரையினை “நெருடல்கள்;” கவிதை நூலின் ஆசிரியர் ஆசிரியர் தமிழ் நேசன் அடிகளார் நிகழ்த்தியிருக்கின்றார்.
மன்னாரில் 28-11-2009 அன்று நடைபெற்ற ”நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா
Reviewed by NEWMANNAR
on
October 09, 2009
Rating:

No comments:
Post a Comment