மன்னாரில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கும் சில பாடசாலை அதிபர்கள்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் கடந்தவருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை மன்னார் மாவட்ட பாடசாலைகளில் உயர்தர வகுப்பில் கல்விகற்க அனுமதிப்பதில் சில பாடசாலைகளின் அதிபர்கள் பின்வாங்குவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். வன்னி யுத்ததத்தில் பல இழப்புக்களை சந்தித்த இம்மாணவர்கள் கடந்தவருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அண்மையில் அதன் பெறுபேறுகளும் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து இம்மாணவர்களை மன்னார் பாடசாலைகளில் அனுமதிப்பதில் பெற்றோர் கவனம் செலுத்தி வருகின்றனர். எனினும் சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.தகுந்த பெறுபேறுகள் இருந்தும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இடம்பெயர்த மாணவர்கள் தொடர்ந்து அனுமதிக்காமல் விட்டால் பாடசாலையின் பெயர் அதிபர் போன்றவர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த வேண்டி வரும் என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.
பெற்றோர்களை எம்மிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
E-mail- newmannar@gmail.com
மன்னார் நெட் .
மன்னாரில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கும் சில பாடசாலை அதிபர்கள்
Reviewed by NEWMANNAR
on
November 18, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 18, 2009
Rating:

No comments:
Post a Comment