இலுப்பக்கடவை பகுதியில் மீள் குடியேற்றம் ஆரம்பம்

இந்நிலையில் கடந்த 17 ம் திகதி இலுப்பக்கடவை பகுதியில் 129 குடும்பங்களைச்சேர்ந்த 515 நபர்கள் தனியார் பேருந்து நான்கில் அழைத்துச் செல்லப்பட்டு மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர். நலன் புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் வடமாகாணத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
நாட்டின் வட பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் வசித்துவரும் நிலையில் அம்மக்களை மீளவும் சொந்த இடங்களில் மீள் குடியேற்றும் நடவடிக்கைகளில்; அரசாங்கம் தொடர்ந்தும் முணைப்பு காட்டி வருகின்றது.

இந்நிலையில் மன்னார் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அடம்பன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் அதன் பின்னர் விடத்தல்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளை கள்ளியடி பாடசாலையில் இருந்து இன்னும் இராணுவம் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

---





இலுப்பக்கடவை பகுதியில் மீள் குடியேற்றம் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
November 04, 2009
Rating:

No comments:
Post a Comment