அண்மைய செய்திகள்

recent
-

மடுமாதா தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது


வரலாற்றுச் சிறப்பு மிக்க புனிதமடுமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற்று ஜூலை மாதம் 2 ஆம் திகதி திருப்பலி ஒப்புக் கொடுப்புடன் நிறைவுறும். இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக புனித மடுப் பரிபாலனசபை அறிவித்துள்ளது.
இதற்காகக் கூடும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்களின் நலன் கருதி தங்குமிட, கழிவறை, குடிதண்ணீர், உணவு வசதிகள், அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும், இங்கு வரும் பக்தர்கள் ஒழுக்கத்துடன் எவ்வித மதுப்பாவனையுமின்றி புனிதத்தைக் காக்கும் படியும், மடு ஆலயப் பங்குத் தந்தை அருட்பணி ஜெஸ்மின் குலாஸ் யாத்திரிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மடுமாதா தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது Reviewed by NEWMANNAR on December 18, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.