அண்மைய செய்திகள்

recent
-

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் வெட்டி கொள்ளை மன்னார் மூர்வீதியில் சம்பவம்

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூர்வீதி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. நேற்று (06.05.2010) அதிகாலை 2.45 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்களே வீட்டின் சமயலறை யன்னலை உடைத்து உள்நுழைந்து மேற்படி கொள்ளைச்சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக தெரிகின்றது.

கறுப்புத் துணியால் முகத்தை மூடிய நிலையில் இனம்தெரியாத மூன்று நபர்கள் கையில் வாள் மற்றும் கத்தியுடன் வீட்டில் இருந்தவர்களை மிரட்டியுள்ளனர். பின் அவர்களிடம் இருந்த சுமார் 18 பவுண் நகைகளையும் இரண்டு கைத் தொலைபேசிகளையும் சூறையாடியிருப்பதாக தெரியவருகின்றது. மன்னாரில் உள்ள “சாஜகான் டயர் வேர்க்ஸ”; கடையின் உரிமையாளரான மதாரூதின் யூசுப் என்பவரின் மேற்படி வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தின்போது அங்கிருந்த நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றினுள் நகைகள்தான் இருக்கின்றது எல்லாவற்றையும் வெளியே எடுக்கும்படி கத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் அப்பெண்ணோ தான் கர்ப்பிணித்தாயென்று கூறியபோதும் கொள்ளையர்கள் அதனை ஏற்க மறுத்து அவரின் கைகளில் பலமாக கத்தியால் வெட்டி காயங்களுக்கு உள்ளாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதிர்ச்சியில் உறைந்து போன நிலையில் வீட்டில் இருந்தவர்கள் காயமடைந்த கர்ப்பிணித்தாயை முச்சக்கர வண்டி ஒன்றின் உதவியுடன் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதை அடுத்து பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த வீட்டில் இடம்பெற்றிருக்கும் கொள்ளைச்சம்பவத்தினால் மன்னார் பகுதி அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கின்றது. கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாககச் சொல்லப்படும் இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் வீட்டின் உரிமையாளர் உட்பட பலரின் வாக்குமூலங்களையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு துப்பறியும் பிரிவைச் சேர்ந்த மோப்பநாயும் வரவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க கடந்த ஒருசில நாட்களாக மன்னார் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் வெட்டி கொள்ளை மன்னார் மூர்வீதியில் சம்பவம் Reviewed by NEWMANNAR on December 18, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.