தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்திஇ புனர்வாழ்வு என்பது பூச்சியமாகவே உள்ளது! செல்வம் எம்.பி கருத்து

ரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது
தமிழ் மக்கள் இழந்து போன அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான இன்றைய ஆட்சியாளர்களுடனும் ஏனைய பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதனை எமது அரசியல் பலவீனம் என்று கருதினால் அதுவோர் முட்டாள்தனமான அரசியல் கருதுகோளாகும்.
கடந்த மூன்று தசாப்த கால கொடுர யுத்தத்தினால் அழிந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க நாம் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை என்ற தளத்தில் உறுதியாகவுள்ளோம்.
அந்த அடிப்படையிலேயே கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் ,இ தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் 12 பிரதேச சபைகளை கைப்பற்றி தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலத்தை தென்னிலங்கைக்கு வெளிப்படு்த்தியிருந்தோம்.
தமிழ் மக்களின் தாயக பூர்வீக நிலங்கள் நாளுக்கு நாள் அபகரிக்கப்படுகின்றது. சிங்கள பௌத்த மத ஆதிக்கம் படிப்படியாக மேலோங்கி வருகின்றது. இதுவோர் ஆபத்தான சமிஞ்ஞையாகும்.
இதுவோர் ஆபத்தான விடயம் என்று தெரிந்தும் கூட அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல் தலைமைகள் வாய் மூடி மௌனிகளாகவேயுள்ளனர். இதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளன என்பது தொடர்பாக எமது மக்கள் நன்கறிவார்கள்.
கடந்தகால தேர்தல்களில் எமது ஒற்றுமை சிதைக்கப்பட்டமை காரணமாக எமது மக்கள் இன்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்திஇ புனர்வாழ்வு என்பது புச்சியமாகவேயுள்ளது. ஆனால் தேவையற்ற பகுதிகளில் தேவைக்கு அதிகமான அபிவிருத்தி நடவடிக்கைகள் பல்வேறு அமைச்சர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எமது மக்களின் அத்தியாவசிய அபிவிருத்திகள் குறித்து நாம் அரச தரப்பினரின் நேரடிக் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு வந்த போதிலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டது.
எமது மக்களின் எதிர்கால வாழ்வியல் நலன்களை எமது மக்கள் பிரதிநிதிகள் கண்காணிப்பில் முன்னெடுக்க வேண்டுமென்பதையே சர்வதேச சமுகத்திற்கும்இ அரசுக்கும் உறுதியாக தெளிவுபடுத்தியுள்ளோம்.
அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அத்துடன் சர்வதேச சமூகத்தின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளிப்பது எமது கௌரவமான அரசியல் என்பதனையும் சுட்டிக் காட்டுகின்றோம்.
எனவே எந்தவொரு சலுகைகளுக்கும் அடி பணிந்து போகாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தமது அரசியல் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அதில் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்திஇ புனர்வாழ்வு என்பது பூச்சியமாகவே உள்ளது! செல்வம் எம்.பி கருத்து
Reviewed by NEWMANNAR
on
March 29, 2011
Rating:

No comments:
Post a Comment