மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சன்னார் கிராமத்தில் சிறுவர் பாடசாலை திறப்பு _

குறித்த பாடசாலையினை சன்னார் கிராமத்தில் அமைப்பதற்கு மன்னார் சகவாழ்வு மன்றம் உதவிகளை வழங்கியுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு பிரிக்கேடியர் மைத்திரி டயேஸ், இராணுவ அதிகாரி முகாந்திரம் மற்றும் நிதி வழங்குனர்கள் உற்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டதோடு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த சிறுவர் பாடசாலையில் சன்னார், ஈச்சலவக்கை, பெரிய மடு ஆகிய கிராமங்களினைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண சிறுவர்கள் கல்விகற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சன்னார் கிராமத்தில் சிறுவர் பாடசாலை திறப்பு _
Reviewed by NEWMANNAR
on
May 23, 2011
Rating:

No comments:
Post a Comment