வவுனியாவில் இருந்து மன்னார் வந்த பயணிக்கு ஏற்பட்ட நிலை _
வவுனியாவில் இருந்து மன்னார் வந்த பயணி ஒருவருக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு குறித்த பயணியின் பணம், நகைகள் களவாடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை வே.மாகாலிங்கம் (வயது-67) என்பவர் பகல் 1.30 மணியளவில் மன்னார் செல்ல காத்திருந்த வவுனியா அரச போக்குவரத்திற்கு செந்தமான பஸ்சில் ஏறியுள்ளார்.
பஸ்ஸினுள் திடீர் என வந்த நபர் ஒருவர் உறவினர் போல அவருடன் உறவாடியுள்ளார்.
நீண்ட நேரம் இருவரும் கதைத்துள்ளனர். பின் நடத்துனரிடம் குறித்த நபர் மகாலிங்கத்தினை டிக்கட் எடுக்க விடாது இருவருக்கும் சேர்த்து அவர் எடுத்துள்ளார்.
பின் மகாலிங்கம் வெற்றிலை வாங்குவதற்காக பஸ்ஸில் இருந்து இறங்க முற்;பட்ட போது அவரை இறங்க விடாது குறித்த நபர் சென்று வெற்றிலையினை வாங்கிக்கொடுத்துள்ளார்.
பின்பு பஸ் புறப்படும் போது வெற்றிலையை உட்கொண்ட மகாலிங்கம் மயக்க முற்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர் அவர் அணிந்திருந்த 2 பவுண் சங்கிலி, 1 பவுண் மோதிரம் பையில் இருந்த 24 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அவருடைய பயணப் பொதி ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றுவிட்டார்.
பஸ் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தினை வந்தடைந்த போதும் மகாலிங்கம் எழும்பவில்லை.
இந்த நிலையில் குறித்த பஸ்ஸின் நடத்துனர் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட மகாலிங்கத்தினை இறக்கி தரிப்பிடத்தில் அனாதரவாக விட்டு சென்று விட்டார்.
மறுநாள் திங்கட்கிழமை காலை 5 மணியளவில் தான் மகாலிங்கத்திற்கு சுயநினைவு திரும்பியது.
பின் அதிர்ச்சியடைந்த மகாலிங்கம் ஏனையவர்களின் உதவியுடன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட பின்னர் உடற்சுகயீனமான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
June 10, 2011
Rating:

No comments:
Post a Comment