மன்னாரில் மாயமாகிய மர்ம மனிதன்!
மன்னாரில் மூர்வீதி காட்டுப் பள்ளிவாசல் வீதிக்கு முன்பாக உள்ள உணவகத்துக்கு முன்னால் நேற்று முன்தினம் நடமாடிய மர்ம மனிதனொருவன் மாயமாக ஓடித் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உணவகத்துக்கு முன்னால் நேற்று முன்தினம் நண்பகல் 12.30 மணியளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனிதனொருவன் உலாவித் திரிவதைப் பலர் கண்டுள்ளனர்.
மேலும் அந்த மனிதன் அங்கு நின்ற சிலரிடம் தலைமன்னாருக்கு எவ்வாறு செல்வது என்று அர்த்தமில்லாமல் வினவியுள்ளான்.
இதனால் சந்தேகம் வலுக்கவே கடைக்காரர் ஒருவர் அவனது சேர்ட் பையினுள் கையை விட்டு அவனது அடையாள அட்டையைத் தேடினார்.
ஆனால் அவரது கைக்குக் கிடைத்தோ விவரம் எதுவும் குறிக்கப்படாது படமொன்று ஒட்டப்பட்ட ஓர் அட்டை மட்டுமே.
இதற்குள் அந்த மனிதன் மாயமாக மறைந்து விட்டான்.
தகவலறிந்து ஏராளமான பொது மக்கள் அந்த இடத்தில் கூடிவிட்டனர். மேலும் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது.அடுத்த சில நிமிடங்களுக்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் அந்த இடத்துக்கு வந்ததுடன் உடனடியாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
------------------------------------------------------------------------------------------------------
மன்னார் மாவட்டத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட கிராம அலுவலர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேசச்செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மேல்,மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம்,மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி அத்துக்கொரல, இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மைத்திரி டயேஸ், இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு அதிகாரி ராமநாயக்கா மற்றும் மன்னார் மாவட்டத்தினைச்சேர்ந்த கிராம சேவையாளர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும் மர்ம நபர்களின் பீதி தற்போது மன்னார் மாவட்டத்திலும் பரவிவருகின்றது.இதனை காரணமாக வைத்துக்கொண்டு திருடர்கள் மன்னாரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் கிராம சேவையாளர்கள் ஈடுபட வேண்டும் என மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னாரில் மாயமாகிய மர்ம மனிதன்!
Reviewed by NEWMANNAR
on
August 18, 2011
Rating:

No comments:
Post a Comment