மன்னார் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்குள் நுழைந்து தப்பிய மர்ம நபர்கள்!

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...
தாழ்வுபாட்டு கிராமத்தில் நேற்று இரவு 9 மணியளவில் 3 மர்ம நபர்கள் உலாவித்திரிவதை கண்ட கிராம மக்கள் அவர்களை பிடிப்பதற்காக துரத்திச்சென்றோம்.
குறித்த மர்ம நபர்கள் தாழ்வுப்பாட்டு கடற்கரையில் அமைந்துள்ள கடற்படையினரது காவலரன் நேக்கிச் ஓடிச் சென்றனர். இதன் போது காவலரனில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின் குமிழ்கள் அணைக்கப்பட்டு இருள் மயமாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தாழ்வுபாடு மற்றும் கீரி ஆகிய பகுதியில் உள்ள கடற்படையினரது முகாம்களில் உள்ள மின்குமிழ்களின் வெளிச்சம் அணைக்கப்பட்டது.
இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தாழ்வுபாட்டு கிராமத்தில் உள்ள பொலிஸார் இப்பிரச்சினையில் தலையிடாமல் உள்ளனர். ஆனால் மன்னார் பொலிஸார் விரைந்து வந்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.
தற்போதும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் நின்றுகொண்டிருக்கின்றனர். ஆண்கள் மர்ம நபர்களை தேடி திரிகின்றனர். ஆனால் கடற்படையினர் அப்பகுதியில் மௌனம் காத்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறாகவே தொடர்கிறது இப் பிரச்சினை.

இதற்கான தீர்வுகள் தான் என்ன? பீதியில் மக்கள்
மன்னார் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்குள் நுழைந்து தப்பிய மர்ம நபர்கள்!
Reviewed by NEWMANNAR
on
August 17, 2011
Rating:

No comments:
Post a Comment