மன்னாரில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் படையினர்
மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று காலை 6.30 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பகுதிக்கு சென்ற பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டதோடு, அப்பகுதியூடாக பள்ளிமுனை கிராமத்திற்கு செல்லும் சகலவிதமான வாகனங்களும் சோதனைக்குற்படுத்தப்பட்டதோடு அடையாள அட்டைகளும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதே சமயம் பள்ளிமுனை கிராமத்திற்கு செல்பர்களை எங்கே போகின்றீர்கள்?ஏன் போகின்றீர்கள் என படையினர் கேள்வி கேட்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல பிரதான வீதிகளிலும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சகல இடங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒரு குழுவாகவும் வேறு சில இடங்களில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருவதோடு தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது மர்ம நபர்கள் மற்றும் கிறீஸ் பூதம் ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு மாவட்டத்தின் சகல கிராமங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இரவு நேரங்களில் மன்னார் நகர் பகுதியில் இளைஞர் விழிப்புக்குழுக்கள் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கிராமங்களை கண்கானித்து வருகின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
August 19, 2011
Rating:

No comments:
Post a Comment