தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவ ஆசிரியர்களுக்கான தெரிவு
யாழ்ப்பாண தேசிய கல்வியியற்கல்லூரிக்கு 2012 ஆம் ஆண்டுக்கான ஆசிரிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 4 ஆம் திகதிவரை காலை 9.30 மணிதொடக்கம் பி.ப. 4.30 மணிவரை தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற உள்ளது.
ஆங்கில மொழிமூல கணித பாடத்துக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 12 ஆம், 13 ஆம் திகதிகளிலும் நடனம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும், வர்த்தகம் பாடநெறிகளுக்கான நேர்முகத்தேர்வு 15, 16, 17 ஆம் திகதிகளிலும் ஆங்கில மொழிமூல விஞ்ஞான பாடநெறிக்கான நேர்முகத்தேர்வு 18 ஆம் திகதியும் இடம் பெறவுள்ளன.
ஆரம்பக்கல்வி, விவசாயம், மனையியல் ஆகிய பாடநெறிகளுக்கான நேர்முகத் தேர்வு 18 ஆம், 19 ஆம் திகதிகளிலும் தமிழ் விசேட கல்விக்கான நேர்முகத்தேர்வு 19 ஆம், 20 ஆம் திகதிகளிலும் கணிதம், விஞ்ஞானம் (தமிழ்மொழி மூலம்) சித்திரம் ஆகிய பாடநெறிக்கான நேர்முகத்தேர்வு டிசம்பர் 4 ஆம் திகதியும் இடம்பெறும் என்று தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி பேராசிரியர் எஸ்.கே.யோகநாதன் அறிவித்துள்ளார்.
இதேவேளை கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் கூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கே முதலாம் கட்ட நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளது. இதில் போதுமானவர்கள் சமுகமளிக்காதவிடத்து குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவ ஆசிரியர்களுக்கான தெரிவு
Reviewed by Admin
on
November 07, 2011
Rating:

No comments:
Post a Comment