இலங்கைச் செய்திகளை வெளியிடும் இணைய தளங்கள், ஊடகங்கள் ஊடக அமைச்சில் பதிவு செய்யுமாறு உத்தரவு

இலங்கை தேசம் பற்றியோ அல்லது அதன் மக்கள் பற்றியோ செய்திகளை வெளியிடும் இணைய ஊடகங்கள் ஊடக அமைச்சில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய வகையிலும், ஊடக ஒழுக்கக் கோவைக்கு புறம்பான வகையிலும் சில செய்தி இணையத்தளங்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே, குறித்த இணையத்தளங்களை நெறிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கி வரும் இலங்கை சார் இணையத்தளங்கள் ஊடக அமைச்சில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைச் செய்திகளை வெளியிடும் இணைய தளங்கள், ஊடகங்கள் ஊடக அமைச்சில் பதிவு செய்யுமாறு உத்தரவு
Reviewed by Admin
on
November 06, 2011
Rating:

No comments:
Post a Comment