அவல வாழ்வு வாழ்ந்து வரும் சிறுநாவற்குளம் கிராம மக்கள்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் சிறுநாவற் குளக்கிராமத்தில் மீளக்குடியமர்ந்து வசித்துவரும் மக்கள் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
1990 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக இந்த மக்கள் இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
இந்தியாவுக்குச் சென்றவர்கள் 2004 ஆம் ஆண்டு நாடு திரும்பினர். ஆனால் இந்தக் கிராமம் இராணுவப் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்டதால் மக்கள் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.1990 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக இந்த மக்கள் இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆனி மாதம் 33 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேர் இந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்ந்துள்ளனர். ஆனால் இவர்களுக்கான வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக் கப்படாத நிலையே காணப்படுகின்றது.
தற்போது தற்காலிக வீடுகளை அமைத்து வாழ்ந்துவரும் இவர்கள் கடும் மழை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இவர்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாக மாறியுள்ளது.
அத்துடன் கிராமத்தைப் பார்க்கும் போது வனாந்தரம் போன்று காட்சியளிக்கின்றது. இந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள தோடு வீட்டுத்திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அவல வாழ்வு வாழ்ந்து வரும் சிறுநாவற்குளம் கிராம மக்கள்
Reviewed by NEWMANNAR
on
November 11, 2011
Rating:

No comments:
Post a Comment