தள்ளாடி இராணுவ முகாமில் பெண் சிப்பாய் தற்கொலை
மன்னார், தள்ளாடி இராணுவ முகாமில் கடமையாற்றி பெண் சிப்பாய் ஒருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.இந்த இராணுவ முகாமில் கடமையாற்றி கொண்டிருந்த குறித்த சிப்பாய், ஏ – 54 ரக கை துப்பாக்கியினால் தனக்கு தானே மார்பில் சுட்டுள்ளார்.
இதனையடுத்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.
24 வயதான தம்புள்ளையை சேர்ந்த இந்திராணி மல்லிகா என்ற பெண் சிப்பாயே தற்கொலை செய்து கொண்டார்.
காதல் தோல்வியே இவரின் தற்கொலைக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் சடலத்தை பார்வையிட்ட மன்னார் நீதவான் கே.ஜீவராணி பிரேத பரிசோனை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
December 01, 2011
Rating:

No comments:
Post a Comment