அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தில் விபத்து : மூவர் படுகாயம் _

 மன்னார் பிரதான பாலத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மன்னார் சேவாலங்கா மன்ற அமைப்பின் மூன்று பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த பணியாளர்கள் மன்னார் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி பணியாளர்கள் மூன்று பேரும் மடுப்பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

தமது அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்த போது மன்னாரில் இருந்து கடல் உணவுப் பொருட்களை ஏற்றி வந்த லொரியுடன் இவர்களது அலுவலக வாகனம் மோதியுள்ளது.

இதன்போது சேவாலங்க மன்றப் பணியாளர்கள் மூவரும் காயமடைந்ததோடு வாகனமும் பாரிய சேதத்திற்குள்ளானது.

லொரி சாரதி சிறு காயங்களுக்குள்ளானார். காயமடைந்தவர்கள் மன்னார் மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ___
மன்னார் பிரதான பாலத்தில் விபத்து : மூவர் படுகாயம் _ Reviewed by Admin on December 11, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.