மன்னாரில் கெய்ன் லங்கா மேற்கொண்ட எண்ணெய் அகழ்வாராய்ச்சி இலங்கையின் வெற்றிகரமான அகழ்வாராய்ச்சியாகும். _
கெய்ன் லங்கா நிறுவனம் இலங்கையில் மேற்கொண்ட எண்ணெய் அகழ்வுப் பணிகள் மிகவும்; வெற்றிகரமான செயற்பாடாக அமைந்துள்ளது. கெய்ன் லங்கா நிறுவனத்தால் மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் பலனாக இரண்டு இயற்கை எரிவாயு கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இலங்கையின் நீண்டநாள் கனவாக இருந்த எரிபொருள் வளம் தொடர்பான நம்பிக்கையும் அதன் காரணமாக துளிர்விட ஆரம்பித்தது.
இலங்கையின் மன்னார் பகுதியில் எண்ணெய் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுவருகின்ற கெய்ன் லங்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெய்ன் இந்தியா நிறுவனம் ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. இத்தகைய பின்னணியிலேயே கெய்ன் லங்கா நிறுவனத்தால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வு பணிகள் வெற்றியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தாம் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு தயாராக இருப்பதாக கெய்ன் லங்கா நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு சமிக்ஞை காட்டியுள்ளது.
2011ம் ஆண்டில் இந்திய நிறுவனம் 78மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்ததுடன் தமது இரண்டாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுப்பதற்கு தற்போது இணக்கம் தெரிவித்துள்ளது. முதலாம் கட்ட அகழ்வு பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே அந்நிறுவனம் இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் இதுவரை 40 இற்கும் மேற்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ள கெய்ன் இந்திய நிறுவனம் ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஏழு அகழ்வாராய்ச்சி பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கெய்ன் நிறுவனம் இலங்கையின் மன்னாரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கொண்ட வெற்றிகரமான பணியாக அமைந்தது.
இவ்வகழ்வுகளின் பயனாக ஹைதரோகாபன் உள்ள நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் SL 2007 – 01 – 001 பகுதியில் கெய்ன் லங்கா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட எண்ணெய் அகழ்வாராய்ச்சி பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. அகழ்வு பணிகளுக்காக ஜப்பான் கப்பலான "சிக்கு" வை பயன்படுத்தியன்மூலம் உலகில் தரமுயர்ந்த தொழில்நுட்பங்;களை தாங்கள் பயன்படுத்துகின்றனர் என்பதையும் கெய்ன் லங்கா எடுத்துக்காட்டியுள்ளது. 1 753 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் பூமிசம்பந்தமான தகவல்கள் பெறப்பட்டு பொருட்கள்;, செயல்முறை, விளக்கம் ஆகியன பயன்படுத்தப்பட்டு முதற்கட்;டமாக மூன்று கிணறுகள் துளையிடப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தின் உதவியும் அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பும் முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கெய்ன் லங்கா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துகொள்வதற்கான காரணமாக அமைந்தது.
மும்பாய் பங்கு சந்தை மற்றும் இந்திய தேசிய பங்கு சந்தை ஆகியவற்றில் 2007 முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக கெய்ன் இந்தியா விளங்குகின்றது.
இந்தியாவின் குர்கோன் பகுதியில் கெய்ன் நிறுவனத்தின் பிரதான தலைமையகம் அமைந்துள்ளதுடன் ஏனைய பிரதான கிளைகள் குஜராத், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தால் நாளாந்தம் 149,104 பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
January 18, 2012
Rating:

No comments:
Post a Comment