இந்தியா இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு பிரஜாஉரிமை
இந்தியாவில் இருந்து மீண்டும் மன்னாருக்கு வந்த 111 பேருக்கான பிரஜாவுரிமைச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக்கழக இயக்குநர் எஸ்.சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா சென்று தங்கியிருந்தவர்களுக்கு இந்தியாவில் பிறந்த பிள்ளைகள் தாயகம் திரும்பியபோதிலும், நீண்டகாலமாக பிரஜாவுரிமைச் சன்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தினால் இலவசமாக இவர்களுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இவர்களுக்கான பிரஜாவுரிமைச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தியா இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு பிரஜாஉரிமை
Reviewed by Admin
on
February 05, 2012
Rating:

No comments:
Post a Comment