மன்னாரில் தீக்கிரையான கடை உரிமையாளர்களுக்குக் கடன் உதவி _
மன்னார் நகர மையத்தில் அமைந்திருந்த தினச் சந்தைக் கட்டிடம் நேற்று எரியுண்ட சம்பவத்தினால் அங்கு ஏற்பட்ட பதற்றம் தணிக்கப்பட்டு அப்பிரதேசம் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தலைமையில் மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையில் இடம் பெற்ற உயர் மட்டஅதிகாரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சில நிவாரணங்களை வழங்குவதென இக்கூட்டத்தின் போது முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
தீக்கிரையான கடைகளைத் தற்காலிகமாக நிர்மாணித்துக் கொள்ளும் வகையில் மன்னார் நகர சபை ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதுடன், வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள கடனடிப்படையில் தலா 2 இலட்சம் ரூபா பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியினை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கியுள்ளார்.
இக்கடை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும் வகையில் அரசாங்க அதிபர் தலைமையில் பல்துறை சார்ந்தவர்களைக் கொண்ட குழுவொன்று நேற்று நியமிக்கப்ட்டதுடன்,இரு மாதங்களுக்குள் அவர்கள் அறிக்கைகளை சமர்ப்பிப்பது என்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
மன்னார் உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,மன்னார் மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள்,மன்னார் நகரசபைத் தலைவர் ஞானப்பிரகாசம்,உறுப்பினர்கள், ஆணையாளர் எஸ்.எல்.டீன் ,வர்த்தக சங்கப் பிரதி நிதகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
March 03, 2012
Rating:

1 comment:
ahaa ithukkuththan eriththangaloo???
Post a Comment