மன்னார் அச்சன் குளத்திற்கான பேருந்து சேவை மீண்டும் வழங்கவேண்டும்
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இடை நிறுத்தப்பட்ட அச்சன் குளம் கிராமத்தினூடான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் எ ,பி,விமலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கையில் தெரிவிக்கப் படுவதாவது,,,,
அச்சன் குளத்தில் இருந்து மேல் படிப்புக்காக வரும் மாணவர்கள் கால் நடையிலும்,துவிச்சக்கர வண்டியிலும் பயணம் செய்ய வேண்டி உள்ளது இதனை கருத்தில் கொண்டு 2009 ம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபையினால் பேருந்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த சேவை கடந்த மாதம் முதல் இடை நிறுத்தப் பட்டுள்ளது.
நாள் ஒன்றிற்கு மூன்று தடவை சேவை நடத்தி வந்த சேவைக்கு போதிய வருவாய் கிடைக்க வில்லை,பாடசாலை மாணவர்கள் பல இடங்களில் இருந்து ஏறி இறங்குவதால் சாரதிக்கு பல இடைஞ்சல்கள் எற்படுகிறது இதனால் பயண நேரத்தில் நேர விரயம் ஏற்ப்படுகின்றது எனக் கூறியே இச் சேவை இடை நிறுத்தப் பட்டுள்ளது.
இச் சேவை இடை நிறுத்தப் பட்டுள்ளதால் மாணவர்களும்,மக்களும் பல கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர் எனவே இலாப நோக்கத்திற்காக செயற்படாது சேவை நோக்கத்துடன் திரும்பவும் இச் சேவையை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Reviewed by Admin
on
March 10, 2012
Rating:

No comments:
Post a Comment