அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றம் அதிர்ச்சியும் கண்டணமும்

யுத்தம் நிறைவடைந்து போர் மேகம் கலைந்து சென்ற பொழுதும் தமிழ் சமூகம் பல விதமான பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதில் திகைத்து நிற்கின்றனர். அண்மைக்காலமாக நாட்டில் பல இடங்களில் சமய தீர்க்க தரிசிகளின் நினைவுச்சிலைகள் உடைக்கப்பட்டது.


மேலும் வழிபடும் சுவாமி சிலைகள் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது, தொடர்ச்சியாக பாடல் பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீச்சர ஆலய சூழலில் பௌத்த விகாரை மற்றும் உருத்திரபுரம் சிவன் ஆலயம் மன்னார் முருங்கன் இரட்டைக்குளம் முத்துமாரியம்மன் ஆலய சூழலில் புத்தர் சிலைகளை புதிதாக பிரதிஸ்டை செய்கின்ற நிகழ்வும் இந்து சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொலன்னறுவை சிவன் ஆலய கருவறையினை உடைத்து காடையர்கள் தமது மூர்க்கமான காரியத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த இலங்கைத்திருநாட்டில் காலம் காலமாக தமிழர்கள் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றாக பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற வரலாற்று நூலில் விஐயனும் 700 தோழர்களும் ஒரு பிராமணருடன் மாதோட்டத்தில் வந்து இறங்கியதாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி விஜயனுக்கு மணம் முடித்து வைப்பதற்காக பாண்டிய மன்னரின் மகளையும் 700 தோழிகளையும் 18 குடிமக்களைச் சேர்ந்த 1000 தழிழர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்ததற்கான சான்றுடன் மகாவம்சம் என்ற நூலின் 7ம் அத்தியாயத்தில் 49 தொடக்கம் 57 ம் வரையான பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து 100மூ ; தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

இதனை வில்லியம் கெய்கர் என்ற ஆங்கில அறிஞர் ஆங்கில மொழியில் பாளி மொழியிலிருந்த மகாவம்ச நூலை மொழி பெயர்த்துள்ளார்.மேலும் அந்த நேரத்தில் ஆட்சி செய்த பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த மன்னர் 1ம் பராக்கிரமபாகு என்பவரால் 75க்கு மேற்பட்ட சைவ சமய ஆலயங்கள் புதிதாக கட்டப்பட்டும் புனர்நிர்மானம் செய்யப்பட்டதாகவும் நாடு முழுவதும் கிடைக்கப்பெற்ற பிரமிக் கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது இதனை மேலும் இந்து ஆலயங்களை போற்றி பேணி பாதுகாத்து வந்ததாகவும் சூலவம்சம் குறிப்பிடுகின்றபோதும். தற்பொழுது இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது வேதனையும் அதிர்ச்சியும் எம் மத்தியில்; நிலை கொள்ளச்செய்துள்ளது. எனவே இவ்விடத்தை நாமும் எமது சமூக மக்கள் அனைவரும் கண்டிக்கின்றோம். தமிழ் மக்களின் பிரதி நிதிகள் இந்து சமய அமைப்புக்கள் அனைவரும் இவ்விடயத்தில் அக்கறை கொண்டு இச்சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனநாயக்க சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் கலந்து கதைத்து தொடர்ச்சியாக இவ்விடயம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகின்றோம்

மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றம் அதிர்ச்சியும் கண்டணமும் Reviewed by NEWMANNAR on May 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.