மன்னார் போராட்டம் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதல்ல – MPசெல்வம்!
மன்னாரில் நடத்தப்பட்ட போராட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டமாக கருதக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விளக்கமளித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் மிக நிதானமாக வெளியிடப்பட வேண்டுமெனவும் சமூகங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
மன்னார் போராட்டம் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதல்ல – MPசெல்வம்!
Reviewed by Admin
on
May 29, 2012
Rating:

No comments:
Post a Comment