பள்ளிமுனை வீட்டத்திட்டத்தை சிறீலங்கா கடற்படையினரிடம் இருந்து மீட்க ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்
பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.
இதன் போது சிறீலங்கா கடற்படையினரும் சிறீலங்கா பொலிஸாரும் அந்த இடத்தில் காவலரண்களை அமைத்து குடியேறினர்.
தற்போது சிறீலங்கா பொலிஸார் வெளியெறிய போதும் சிறீலங்கா கடற்படையினர் வெளியேற மறுக்கின்றனர். இவ்விடையம் தொடர்பில் சிறீலங்கா கடற்படையினரிடம் கேட்டால் உரிய பதில் எவையும் கூறுவதில்லை.
குறித்த குடியேற்ற மக்கள் தற்போது வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.
சிறீலங்கா கடற்படையினர் தமது வீடுகளை விட்டுத்தராத பட்சத்தில் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள் இருக்கின்றதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிமுனை வீட்டத்திட்டத்தை சிறீலங்கா கடற்படையினரிடம் இருந்து மீட்க ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்
Reviewed by Admin
on
May 30, 2012
Rating:
No comments:
Post a Comment