அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி தேசிய டிப்ளோமா பட்டமளிப்பு விழா

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் கடந்த 2005/2007, 2006/2008, 2007/2009, 2008/2010 ஆகிய கல்வி ஆண்டிற்கான தேசிய டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான தேசிய டிப்ளோமா பட்டமளிப்பு விழாவிரைவில் நடைபெற உள்ளது.


மேற் குறித்த 5 ஆண்டுகளில் கற்பித்தலிலான தேசிய டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்து வெளியேறியவர்கள் பட்டமளிப்பு விழா பற்றிய தகவல்களை பெறுவதற்காக சுய விலாசம் இடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட அலுவலக கடித உறைஒன்றினை பீடாதிபதி ,தேசியகல்வியியல் கல்லூரி ,பூந்தோட்டம் ,வவுனியா.என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பாக கடிதம் அனுப்பும் கடித உறையின் இடது பக்க மூலையில் பட்டமளிப்பு விழா என்ற பதத்துடன் தங்களது கல்வி ஆண்டையும் குறிப்பிட்டு  அனுப்பவும்.

இச் செய்தியை படிப்போர் தமது சகபாடிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.நீண்ட காலத்தின் பின் இப் பட்டமளிப்பு விழா  நடைபெறுவதால் டிப்ளோமா தாரிகளின் தற்போதைய முகவரிகளை பெற முடித்திருப்பதால் இவ்விடயம் கொண்டு வரப்படுகின்றது.

பட்டமளிப்பு விழா நடைபெறும் காலம் ,இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும்


தகவல் =பீடாதிபதி (வவுனியா கல்வியியல் கல்லூரி )

.
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி தேசிய டிப்ளோமா பட்டமளிப்பு விழா Reviewed by Admin on June 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.