மன்னாரில் நகை பணம் கொள்ளை -ஆசிரியையும் இரு பிள்ளைகளும் கைது!
மன்னார் நானாட்டான் உமநரி பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளையில் பறிபோன 25 பவுண் நகையும் பணமும் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக ஆசிரியை ஒருவரும் அவரது இருபிள்ளைகளும் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி ஓய்வூதியர் ஒருவரது வீட்டில் பட்டப்பகலில் இந்த நகைகளும் 75000 .00பணமும் கொள்கையிடப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில்இ களவு போன கையடக்கத் தொலைபேசி மூலம் இந்தக் கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களை பொலிஸார் தேடிப்பிடித்ததுடன் அவர்களிடமிருந்து 25 பவுண் நகையும் 75.000 ரூபா பணமும் மீட்கப்பட்டது.
ஆசிரியை ஒருவரும் அவரது மகளும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் திங்கட்கிழமை மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
ஆசிரியையை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி மகள் இளம் தாய் என்பதால் அவரை 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையை அடுத்து ஆசிரியையின் மகன் ஒருவரும் உறவினர் ஒருவரும் திங்கட்கிழமை பண்டிவிரிச்சான் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன் மீட்கப்பட்ட நகைகளும் பணமும் நீதிமன்றத்தின் ஊடாக உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மன்னாரில் நகை பணம் கொள்ளை -ஆசிரியையும் இரு பிள்ளைகளும் கைது!
Reviewed by NEWMANNAR
on
June 28, 2012
Rating:

No comments:
Post a Comment