மன்னாரில் அதிகரித்த விலையில் கடல் உணவுகள்
மன்னாரில் கடந்த சில வாரங்களாகவே மீன் பிடி மிகவும் மந்த கதியில் இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய காலனிலை மாற்றத்திற்கு அமைவாக கடும் காற்று வீசி வருகின்றது.இதனால் இன்னும் சில வாரங்களுக்கு மீன் பிடிபடும் வீதம் குறையும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீன் வளத்திற்கு பெயர் போன மன்னார் குடாவில் மன்னார் வடகடலிலும்,இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் தென் கடலிலும் யுத்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட நேர எல்லையிலேயே மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கு முந்தைய காலங்களில் மன்னாரில் பிடிக்கப்படும் கடலுணவுவகைகள் நூற்றுக்கணக்கான லொறிகளில் ஏற்றப்பட்டு நாட்டின் தென்பகுதி உள்ளிட ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வந்தன.இதனால் மன்னார் மீனவர்களின் வருமானம் நன்றாக இருந்தது..ஆனாலும் தற்போது மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை உபகரணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளன.
இந்நிலை தொடருமாக இருந்தால் மன்னாரில் அறுபது வீதம் மீன் வளத்தை நம்பி வாழ்ந்த மீனவக்குடும்பங்கள் வேறு தொழிலை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.இது இவ்வாறிருக்க மன்னார் பரவைக்கடல் வற்றி உள்ளது,பெருங்கடலிலும் காற்றின் வேகத்தால் பெரும் அலைகள் எழும்பி உள்ளன.
இதனால் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்புவதிலும்,கடலுணவுகளை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்,இதனால் மன்னாரில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதோடு மீனின் விலையும் அதிகரித்துக்காணப்படுகிறது.

Reviewed by Admin
on
June 05, 2012
Rating:
No comments:
Post a Comment