மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை, காணி அபகரிப்புக்கு எதிராக மன்னாரில் எதிர் வரும் 07 ஆம் நாள் உண்ணாவிரத போராட்டம்! -செல்வம் அடைக்கலநாதன்-

போர் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் சுதந்திரமான முறையில் கடல் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்படையினரால் பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையினால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி மன்னார் மாவட்டத்தில் அரச தரப்பு மற்றும் படைத்தரப்பினரால் தமிழ் மக்களின் குடியேற்றக்காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் மீள் குடியேற முடியாத நிலையில் காடுகளில் தஞ்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள பாஸ் நடமுறை மற்றும் மன்னார் மாவட்டத்தில் படைத்தரப்பினராலும் அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர் வரும 07 ஆம் திகதி(07-07-2012) மன்னார் மாவட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும்தெரிவித்தார்
மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை, காணி அபகரிப்புக்கு எதிராக மன்னாரில் எதிர் வரும் 07 ஆம் நாள் உண்ணாவிரத போராட்டம்! -செல்வம் அடைக்கலநாதன்-
Reviewed by NEWMANNAR
on
June 30, 2012
Rating:

No comments:
Post a Comment