அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் மன்னார் ஆயர் - முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு-படங்கள் இணைப்பு

மன்னாரில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் இடைவெளியைக் குறைத்து இரண்டு சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வையும், நட்புறவையும் வலுப்படுத்தும் ஆரம்பக் கட்ட முயற்சியாக நேற்று (23.06.2012) சனிக்கிழமை மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகைக்கும், மன்னார் முஸ்லிம் சமய சமூகத் தலைவர்களுக்கும் இடையில் ஓர் சந்திப்பு இடம்பெற்றது. மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மன்னார் சர்வமதப் பேரவை மேற்கொண்டிருந்தது.


  இச்சந்திப்புத் தொடர்பாக மன்னார் சர்;வமதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் கருத்துத் தெரிவிக்கையில், இச்சந்திப்பு சுமுகமானதாகவும், சினேகபூர்வமானதாகவும் அமைந்ததோடு பரஸ்பரம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும், மன ஆதங்கங்களை வெளிப்படுத்தவும் சிறந்த களமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிட்டார்.

  இச்சந்திப்புத் தொடர்பாக தமிழ் நேசன் அடிகளார் மேலும் தெரிவித்ததாவது,  மன்னாரில் உள்ள அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான மக்கள் மன்னாரில் இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மிகுந்த வேதனை கொண்டுள்ளனர். இம்முறுகல் நிலையை மேலும் வளரவிடாமல் தடுப்பதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினரை சந்திக்க வைத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வழிசெய்ய வேண்டும் என எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்ல மன்னாருக்கு வெளியே உள்ள நல்மனம் கொண்ட பல தரப்பினரும் இந்த நிலைமை தொடர்பாக தங்கள் அக்கறையை வெளிப்படுத்தி வந்தனர். எனவேதான் மக்களின் இந்த உணர்வுகளைப் புரி;ந்துகொண்டு மன்னாரில் இன, மத நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக இச்சந்திப்பை மன்னார் சர்வமதப் பேரவை ஏற்பாடு செய்தது. மீள் குடியேற்றம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் சட்ட ஒழுங்குவிதிகளுக்கு முரணாக நடந்த பாரபட்சங்களை மன்னார் ஆயர் எடுத்து விளக்கினார். அதேபோன்று முஸ்லிம் சமய, சமூகத்தலைவர்களும் தாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும், அவசரமாக தீர்க்கப்படவேண்டிய சில பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர். இச்சந்திப்பு முதல் கட்ட சந்திப்பாக அமைந்தது. எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அடுத்த கட்டச் சந்திப்பில் கௌரவ அமைச்சர் றிசாட் பதயுதீன் அவர்களையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. மன்னாரில் இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த மன்னார் சர்வமதப் பேரவை தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து பாடுபடும் தமிழ் தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.





  இச்சந்திப்பின்போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை அடிகளார், மன்னார் இந்துக் குருமார் பேரவையின் தலைவர் திரு. மனோகர ஐங்கர சர்மா, செயலாளர் ம. தர்மகுமாரசர்மா குருக்கள், பொறியியலாளர் திரு. ச. இராமகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் மன்னார் கிளைத் தலைவரும் மன்னார் சர்வமதப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான மௌலவி எஸ். ஏ. அஸீம் அவர்கள் மன்னார் முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களின் குழுவுக்கு தலைமை வகித்தார்.

மன்னார் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் மன்னார் ஆயர் - முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு
மன்னார் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் மன்னார் ஆயர் - முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on June 24, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.