சிலாபத்துறைப் பகுதியில் மாணவி மீது 3 இளைஞர்கள் வன்புணர்வு
பாடசாலை மாணவியின் கண்களையும், கைகளையும் கட்டி மறைவான இடத்துக்குக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்கள் அந்த மாணவியைப் பலவந்தமாக கதறக்கதற வன்புணர்வுக்கு உட்படுத்தினர்.
இந்த மிலேச்சத்தனமான கொடூர செயல் மன்னார் முசலிப் பிரதேச செயலர் பிரிவுக்குட் பட்ட சிலாபத்துறைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பலவந்தமாகக் கடத்தி அந்த மாணவியின் கண்களையும், கைகளையும் கட்டி ஆள்நடமாட்டமற்ற இடமொன்றுக்குக் கொண்டுசென்றனர்.
அங்கு மாணவியை மூவரும் கதறக்கதற வன்புணர்வுக்கு உட்படுத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சிலாபத்துறைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதன்பின்னர் களத்தில் இறங்கிய பொலிஸார் மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்களை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்ஸன் உத்தரவிட்டார்.
குறித்த மாணவி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனை அறிக்கையைப் பெறும்பொருட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிலாபத்துறைப் பகுதியில் மாணவி மீது 3 இளைஞர்கள் வன்புணர்வு
Reviewed by NEWMANNAR
on
June 02, 2012
Rating:

2 comments:
இது முசலிப் பிரதேசத்தில் அரிப்பு என்ற தமிழ் கிராமத்தில் நடைபெற்றது என்பதை குறிப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
முசலிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு என்ற கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சகிதம் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
Post a Comment