மீனவர் சங்க நிர்வாகங்களில் படைத்தரப்பு, அரசியல் தலையீடு; சுதந்திரமாக சேவையாற்ற முடியவில்லை என்கிறார் மீனவர் சமாசத் தலைவர்
பாதுகாப்புப் பிரிவினர் அழுத்தம் மற்றும் அரசியல் தலையீடுகள் ஆகியவற்றின் மூலம் நியமனம் பெறுகின்ற உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகம் எப்பொழுதும் கடற்றொழிலாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியாது. வட மாகாணத்தின் சில மாவட்டங்களில் இந்த நிலை இன்றும் காணப்படுகின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் கூட்ட மைப்பின் தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார்.
இந்திய இழுவைப் படகு களின் தாக்கமும் வடக்கு மீனவ சமூகம் தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகளும் என்னும் தொனிப் பொருளில் யாழ்.நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு:
கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தமது நிர்வா கத்தைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த நிர்வாகம் சிறப்பாகச் செயலாற்றும்.ஆனால் துரதிர்ஷ்ட வசமாக வடமாகாணத்தில் பாதுகாப்புப் பிரிவினரின் அழுத்தம், அரசியல் தலையிடுகள் சில சங்கங்களில் உள்ளன.
இவ்வாறு நியமனம் பெறுகின்ற உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகம் சிறப்பாகச் சேவையாற்ற முடியாது.
எனவே மாவட்டங்களுக்குப் பொறுப்பான அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக தங்கள் சங்கங்களைத் தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்என்றார்.
தொடர்ந்து உரையாற் றிய யாழ்.மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ரமேஷ் கண்ணா தெரிவித்ததாவது:
எமது பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியர்கள் போதாமல் உள்ளது. முன்பு யாழ்.மாவட்டக் கடற்றொழி லாளர் சங்கங்கள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. கடற்றொழில் திணைக்களத்தின் சேவைகளைச் சங்க நிர்வாகம் ஊடாகச் செயற்படுத்த முடிந்தது.
தற்போது அவ்வாறான நிலை காணப்படவில்லை. மேலும் எமக்கும் போதிய ளவு ஊழியர்கள் இல்லாத தனால் அதிகளவான வேலைப்பளுவினை எதிர்நோக்கு கின்றோம்என்றார்.
மீனவர் சங்க நிர்வாகங்களில் படைத்தரப்பு, அரசியல் தலையீடு; சுதந்திரமாக சேவையாற்ற முடியவில்லை என்கிறார் மீனவர் சமாசத் தலைவர்
Reviewed by NEWMANNAR
on
July 21, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment