அண்மைய செய்திகள்

recent
-

சூடு பிடிக்கும் மன்னார் விவகாரம்: விடுதலைப் புலிகள் மீது பழியை போடும் முஸ்லிம் தலைமைகளின் இயலாமை ..

தற்போது மன்னாரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்தார்.
கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஜும்ஆ குத்பா பேருரையிலேயே அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி இந்த பகிரங்க வேண்கோளை விடுத்தார்.

மன்னார் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மனிதாபிமான முறையில் இப்பிரச்சினை கையாளப்பட்ட வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் தெரிவித்தார்.
"இப்பிரச்சினை முஸ்லிம் சமூகத்தின் உரிமை பிரச்சினையாகும். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க வேண்டாம். இப்பிரச்சினையின் ஊடாக சிலர் மன்னார் முஸ்லிம்களின் சொத்துக்ளை சிலர் அபரிக்க முற்படுகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.
"இந்த பிரச்சினைக்க்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். இந்த மன்னார் முஸ்லிம்ளை வெளியேற்றிய அநியாயத்தை மேற்கொண்டவர்கள் குறித்த அநியாயத்தை மேற்கொள்ள இன்றில்லை.
மன்னார் முஸ்லிம்களின் உரிமைக்காக இலங்கை முஸ்லிம்களும் உலக முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டும்" என அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ள விடுதலை புலிகளினால் மீள்குடியேற்றப்பட்ட மன்னார் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவி;த்து முஸ்லிம்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை புலிகளின் ஆதரவாளர்களினால் மீள்குடியேற்றப்பட்ட மன்னார் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக தெரிவித்து ஜும்ஆ தொழுகையினை அடுத்தே மருதானை பள்ளிவாசலுக்கு முன்னாள் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, விடுதலை புலிகள் சார்பானவர்களினால் நாட்டின் நன்மதிப்பை குழப்ப முயற்சிக்கப்படுவதாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் மன்னார் மாவட்ட கிளை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷகிப்பும் குறித்த ஊடக அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் மன்னார் மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.
சூடு பிடிக்கும் மன்னார் விவகாரம்: விடுதலைப் புலிகள் மீது பழியை போடும் முஸ்லிம் தலைமைகளின் இயலாமை .. Reviewed by NEWMANNAR on July 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.