அண்மைய செய்திகள்

recent
-

பிரஜை எனப்படுபவர் ஓர் நாட்டின் எல்லைக்குள் பிறந்ததோடு மட்டுமல்லாமல் அதே நாட்டை பூர்வீகமாக கொண்டவராகவும் இருப்பார்- சட்டத்தரணி த.வினோதன்.


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பில் பிரஜைகள் எனும் வாசகமும் அதற்கான கருத்தேற்பும் பல்வேறு உறுப்புரிமைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர சர்வதேச குடியியல், மாற்று அரசியல் உரிமைகள் மீதான பொருத்தனைகளிலும் பிரஜைகள் எனும் பதத்திற்கான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சட்டத்தரணி த.வினோதன் தெரிவித்தார்.

முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் மாதாந்த கலந்துரையாடல் அண்மையில்; தலைவர் திரு ம.சறோரூபன் தலமையில் சவேரியார்புரம் மீள்எழுச்சிக்கட்டிடத்தில் நடைபெற்ற போது இக் கூட்டத்தில் முக்கியமாக பிரஜைகளும் அபிவிருத்தியும் என்ற கருப்பொருளில் முசலி பிரதேச பிரஜைகள் குழு உறுப்பினர்களுக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணி த.வினோதன் கருத்துரை வழங்கினார்.

 இதன் போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பில் பிரஜைகள் எனும் வாசகமும் அதற்கான கருத்தேற்பும் பல்வேறு உறுப்புரிமைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர சர்வதேச குடியியல், மாற்று அரசியல் உரிமைகள் மீதான பொருத்தனைகளிலும் பிரஜைகள் எனும் பதத்திற்கான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பிரஜை எனப்படுபவர் ஓர் நாட்டின் எல்லைக்குள் பிறந்ததோடு மட்டுமல்லாமல் அதே நாட்டை பூர்வீகமாக கொண்டவராகவும் இருப்பார். அவருக்கான உரிமைகள் அந்நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டதாய் அமையும் எனவும் கூறினார்.

அந்த வகையில் இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் 3 இலங்கைப் பிரஜைக்கான அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவை மீறப்படும் போது நிவாரணம் பெற்றுக்கொள்ளக்கூடிய வழி முறைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

உறுப்புரை 10 தொடக்கம் 14 வரை பிரஜைகளுக்கான உரிமைகள் பற்றி பேசுகின்றன.விரும்பிய மதத்தை நம்பிக்கையை மனச்சாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்கள் என்பதுடன் சட்டத்தினால் சமமாக பாதுகாக்கப்படவும் உரித்துடையவர்கள்.

 சித்திரவதை கொடுரமான நடாத்துகை  என்பவற்றிலிருந்து விடுபடும் சுதந்திரம் பேச்சுஇ கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் தகவல்களை பெற்றுக்கொள்ளும் சுதந்திரம் தகவல்களை தெரிந்துக்கொள்ளும் சுதந்திரம்  போன்ற அடிப்படை உரிமைகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றன. 

இலங்கைப் பிரஜைகள் தமது நாட்டில் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழவும் எந் நிலையிலும் தமது அடிப்படை உரிமை மீறப்பாடாதிருக்கவும் உரித்துடையவர்கள். 
மேலும் இலங்கை அரசு தனது பிரஜைகளுக்கான உரிமைகளை பாதுகாக்க கடப்பாடுடையது எனவும் விதந்துரைக்கின்றது. 

பிரஜைகளுக்கு கூறப்பட்டதுடன் மக்களினால் கேட்கப்பட்ட வினாக்களுக்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. 

இனிவரும் காலங்களில் மக்களின் உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எவ்வாறு மக்கள் செயற்றட வேண்டும் எனவும் கிராம மட்டதில் நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக எந்த அதிகாரியிடதும் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் அறிந்துக்கொள்ளவும் முடியும் எனவும்  சட்டத்தரணி த.வினோதன் மேலும் தெரிவித்தார்.
பிரஜை எனப்படுபவர் ஓர் நாட்டின் எல்லைக்குள் பிறந்ததோடு மட்டுமல்லாமல் அதே நாட்டை பூர்வீகமாக கொண்டவராகவும் இருப்பார்- சட்டத்தரணி த.வினோதன். Reviewed by NEWMANNAR on August 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.