அண்மைய செய்திகள்

recent
-

அநுராதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்


வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி இன்று காலை மரணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தில்ரூக்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதியே  உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தில்ரூக்ஷன் என்ற இளைஞர் நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் இந்த இளைஞர் சிகி;ச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார் இந்தநிலையிலேயே மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்தமையை அடுத்தே அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிமலரூபன் என்ற இளைஞர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இரண்டாம் இணைப்பு

வவுனியா சிறைச்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பிறிதொரு தமிழ் அரசியல் கைதி இன்று காலை
மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.

இன்று ராகம மருத்துவமனையில் மரணமானவர் 34 வயதான மரியதாஸ் நேவிஸ் தில்ருக்ஷன் எனவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்  எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த அரசியல் கைதி வவுனியா சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட தினத்திலிருந்தே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக மஹர மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்ததை தொடர்ந்து அங்கிருந்ததமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் ஏற்கனவே சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 29 வயதான வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியும் கடந்த மாதம் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமானமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அநுராதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம் Reviewed by NEWMANNAR on August 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.