அண்மைய செய்திகள்

recent
-

தமிழீழம் என்ற சொல்லடங்கிய கட்சிகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை

பிரிவினையைத் தூண்டும் வகையில் “தமிழீழம்” என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து இலங்கை தேர்தல் ஆணையாளர் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


தமிழில் ஈழம் என்பது இலங்கையை குறிக்கும் அதேவேளை, தமிழீழம் என்பது பிரிவினையை அர்த்தப்படுத்துவதாகவும், இதனால் தமிழீழம் என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் தமிழீழ விடுதலை இயக்கம் மட்டும் தான் தமிழீழம் என்ற சொல்லைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழம் என்ற சொல்லடங்கிய கட்சிகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை Reviewed by NEWMANNAR on August 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.