மன்னார் பள்ளிமுனை , பனங்கட்டிக்கோட்டு கிராம இளைஞர்களுக்கிடையில் மோதல்
மன்னார் பள்ளிமுனை இளைஞர்களுக்கும், பனங்கட்டுக்கோட்டு கிராம இளைஞர் குழு ஒன்றிற்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டரங்கை அண்மித்த பகுதியில் மோதல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பணங்கட்டிக்கொட்டு கிராம விளையாட்டுக்கழகத்திற்கும்,வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அணி ஒன்றிற்கும் இடையில் உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
இதன் போது மாலை 4.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு வந்த இளைஞர்கள் குழு ஒன்று விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த போது திடீர் என கற்களினால் மைதானத்தை நோக்கி வீசியுள்ளனர். -
பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் குறித்த போட்டி இடம் பெற்றுக்கொண்டிருந்த சமயமே குறித்த கல் வீச்சு இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் மோதல் இடம் பெற்றுக்ககொண்டிருக்கையில் ஒருவரது வாகனத்தின் கண்ணாடிகளை இளைஞர்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இரண்டு கிராம மக்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மடு பண்டிவிருச்சான் கிராமத்தில் இடம் பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது குறித்த 2 கிராம அணிகளும் கலந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்தே குறித்த சம்பவமும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பவத்தை கண்டித்து மன்னார் பணங்கட்டிக்கோட்டு கிராம மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் கடற்தொழிலுக்குச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தப்பது.

Reviewed by NEWMANNAR
on
September 26, 2012
Rating:

No comments:
Post a Comment