மன்னாரில் இன்று சிறுவர்களுக்கான அமைதி பேரணி.
மன்னார் சேவாலங்கா மன்றம் மனிதாவிமான அமைப்புக்களுடன் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னாரில் சிறுவர்களுக்கான மாபெரும் அமைதி நடைப்பவனி ஒன்றை நடாத்தவுள்ளதாக மன்னார் சேவாலங்கா மன்றத்தின்மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஏ.குபேரக்குமார் கஸ்மீர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் இன்று 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெறவுள்ள நிலையில் மன்னாரில் இன்று மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் செபஸ்தியார் பேராலய வீதியை சென்றடையும்.பின் மன்னார் பஸார் வீதிடாக சென்று குறித்த நடைப்பவனி மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடையும்.
குறித்த அமைதி பேரணியில் பாடசாலை மாணவர்கள்,பொது மக்கள் என சுமார் ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளவுள்ளதாக மன்னார் சேவாலங்கா மன்றத்தின்மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஏ.குபேரக்குமார் கஸ்மீர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர நிருபர்
மன்னாரில் இன்று சிறுவர்களுக்கான அமைதி பேரணி.
Reviewed by NEWMANNAR
on
September 30, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment