சட்டவிரோதமான முறையில்; களவாடப்பட்ட பசு இறைச்சிக்காக வெட்டிய சம்பவம்-குற்றவாளிக்கு 6 மாத சிறையும் 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம்.
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சின்னக்கரிசல் பகுதியில் கலவாடப்பட்ட நிலையில் இறைச்சிக்காக பசுமாட்டை வெட்டிய நபரை மன்னார் பொது சுகாதரா பரிசோதகர்கள் கைது செய்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது குறித்த சந்தேக நபருக்கு 6 மாத சிறைத்தண்டனையும்,50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் வீதித்து மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் தீர்ப்பளித்தார்.
சின்னக்கரிசல் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த வியாழன் இரவு சட்டவிரோதான முறையில் மாடு இறைச்சிக்காக வெட்டப்படுவதாக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்ற போது மாடு வெட்டப்பட்ட நிலையில் அவர்கள் தப்பிச் சென்றனர்.
அவர்கள் வெட்டியது வயிற்றில் குட்டியுடனான பசு எனவும் குறித்த பசு திருடப்பட்டது எனவும் தெரிய வந்தது.
இதே நேரம் வெட்டப்படுவதற்கு வைத்திருந்த மாடு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் மன்னார் பொது சுகாதரா பரிசோதகர்கள் மன்னார் நீதி மன்றில் வளக்குத்தாக்கல் செய்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த பசு மாட்டை வெட்டிய நபர் கைது செய்யப்பட்டு நேற்று திங்கட்கிழமை(17-09-2012) மன்னார் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் குறித்த நபருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்ததோடு 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
குறித்த பணத்தை செலுத்தாது விட்டால் மேலும் 6 மாதம் சிரைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
சின்னக்கரிசல் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த வியாழன் இரவு சட்டவிரோதான முறையில் மாடு இறைச்சிக்காக வெட்டப்படுவதாக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்ற போது மாடு வெட்டப்பட்ட நிலையில் அவர்கள் தப்பிச் சென்றனர்.
அவர்கள் வெட்டியது வயிற்றில் குட்டியுடனான பசு எனவும் குறித்த பசு திருடப்பட்டது எனவும் தெரிய வந்தது.
இதே நேரம் வெட்டப்படுவதற்கு வைத்திருந்த மாடு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் மன்னார் பொது சுகாதரா பரிசோதகர்கள் மன்னார் நீதி மன்றில் வளக்குத்தாக்கல் செய்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த பசு மாட்டை வெட்டிய நபர் கைது செய்யப்பட்டு நேற்று திங்கட்கிழமை(17-09-2012) மன்னார் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் குறித்த நபருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்ததோடு 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
குறித்த பணத்தை செலுத்தாது விட்டால் மேலும் 6 மாதம் சிரைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
சட்டவிரோதமான முறையில்; களவாடப்பட்ட பசு இறைச்சிக்காக வெட்டிய சம்பவம்-குற்றவாளிக்கு 6 மாத சிறையும் 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம்.
Reviewed by NEWMANNAR
on
September 18, 2012
Rating:
No comments:
Post a Comment