மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம்-மேலும் 2 சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றில் சரண்.
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 2 சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் குறித்த 2 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.
-கடந்த யூலை மாதம் 18 ஆம் திகதி மன்னார் 'சதோசா' கட்டிடத்திற்கு முன் ஒன்று கூடிய மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சற்று முன் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பின் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் களைக்க முற்பட்ட போது குறித்த இடத்தில் பாரிய கலவரமாக மாறியது.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் நீதிமன்றம் மீது கற்களினால் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் படிப்படியாக 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை(17-09-2012) மன்னார் நீதிமன்றத்தில் 2 சந்தேக நபர்கள் சரணடைந்தனர்.
இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இது வரை 43 சந்தேக நபர்கள் சரணடைநதுள்ளனர்.
-இந்த நிலையில் மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்ககு விசாரனை எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் குறித்த 43 பேரூம் மன்னார் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
இதே நேரம் மன்னார் நீதவானுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்குமான வழக்கும் எதிர்வரும் 24 ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர நிருபர்

Reviewed by NEWMANNAR
on
September 18, 2012
Rating:
No comments:
Post a Comment