அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் சம்பவம்-மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினருக்கு எதிராக 3 வழக்குகள்.

மன்னார் நீதிமன்றம் மீது கடந்த யூலை மாதம் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 41 சந்தேக நபர்களில் ஒருவரான மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் ஒருவர் மீது மன்னார் பொலிஸார் 3 வழக்குகளை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.


குறித்த 41 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த நகர சபை உறுப்பினருக்கு எதிராக ஏற்கனவே மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் மன்னார் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுள்ளது.

மூன்றவது வழக்காக குறித்த நகர சபை உறுப்பினர் உள்ளடங்கலாக சிலர் மீது மன்னார் கோந்தைப்பிட்டியில் உள்ள மீன் பிடி வாடிகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றில் பொலிஸார் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை  இம்மாதம் 21 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்வுள்ள நிலையில் குறித்த சந்தேக நபர்கள் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.

இதே நேரம் மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 41 சந்தேக நபர்களும் எதிர்வரும் 24 ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு,மன்னார் நீதிபதிக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வரும் நிலையில் அமைச்சர் றிஸாட் பதீயூதின் அவர்களையும் இம்மாதம் 24 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு பதில் நீதிவான் எஸ்.ஆர்.எம்.திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் சம்பவம்-மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினருக்கு எதிராக 3 வழக்குகள். Reviewed by NEWMANNAR on September 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.