இனி யார் வருவார்?-கவிதை
கலையாத
நினைவுகளும்,
கலைந்து போன
நீளும்
நெடும் நிசப்தத்தில்
நெருடிக்கொண்டிருக்கும்
மனச்சாட்சி!
சூரியனுக்கும்
சந்திரனுக்கும் நடுவில்
பிளைத்துத்தவிக்கும்
பூமிப்பந்து!
அதுபோல
கனவுகளுக்கும்
நிஜங்களுக்கும் இடையில்
பகலும்,இரவும்
படுத்தும் பாடு......
உறவுகளைத்தொலைத்த
நமக்குத்தானே
உண்மை விளங்கும்!
இன்னும்
எங்கள் தெருக்களில்
மாறாமல் வீசும் நம்மவர்
இரத்த வாடை
மரணத்தை
ஞாபகப்படுத்திக்
கொண்டே இருக்கிறது
உருக்குலைந்த
நம் தேசத்தை
தூக்கி நிறுத்த
இனி யார் வருவார்?
*வனிதாச்சந்துரு*
-------------------------------------------------
உங்கள் கவிதைகளும் இடம்பெற விரும்பினால் எழுதி அனுப்புங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல்முகவரி newmannar@gmail.com
இனி யார் வருவார்?-கவிதை
Reviewed by NEWMANNAR
on
October 13, 2012
Rating:
No comments:
Post a Comment