மன்னார் சிவபூமியில் கலாநிதி மனோகரக்குருக்களின் திருவுருவச்சிலை நிறுவும் பணி ஆரம்பம் -பட இணைப்பு.
கடந்த 40 ஆண்டுகளாக இன மத வேறுபாடின்றி சமய சமூகப் பணிகளை ஆற்றி எல்லோரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த மனோகரக்குருக்கள் ஐயாவின் திருவுருவச் சிலையினை மன்னாரில் மிகப் பொருத்தமான ஒர் இடத்தில் நிறுவுவது என மக்களும் பொது அமைப்புக்களும் தீர்மாணித்திருந்தன.
இதன் தொடர் நடவடிக்கைகளாக மிகப் பொருத்தமான ஒர் இடத்தை தெரிவுசெய்து அதற்கான அனுமதியை பெறும் பொருட்டு மன்னார் நகர சபைக்கு ஆவணங்கள் கையழிக்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் ஐயாவின் இறுதிச்சடங்கில் நகரசபையால் தெரிவித்த கருத்திற்கமைய ஐயாவின் பெயரால் கலாநிதி மனோகரக்குருக்கள் வீதி எனும் பெயர் வீதிக்கு சூட்டப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
------------------------------
கலாநிதி மனோகரகுருக்கள் ஐயா அவர்களின் மகத்தான வாழ்வின் சாட்சியாக கலாநிதி மனோகரகுருக்கள் ஐயா அவர்கள் வாழ்ந்த தெருவுக்கு ஐயா அவர்களின் நாமம் கொண்டு கலாநிதி மனோகரகுருக்கள் வீதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது ..... மன்னர் நகர பிதாவினால் (நகரமண்டபம் ) (28/8/2012) திறக்கப்பட்டுள்ளது .. பட இணைப்பு
மன்னார் சிவபூமியில் கலாநிதி மனோகரக்குருக்களின் திருவுருவச்சிலை நிறுவும் பணி ஆரம்பம் -பட இணைப்பு.
Reviewed by NEWMANNAR
on
October 10, 2012
Rating:

No comments:
Post a Comment