அண்மைய செய்திகள்

recent
-

பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தவேளை கலைந்தது அவுஸ்திரேலியக் கனவு!


சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு தயாராகிய 31பேர் வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு கைது செயப்பட்ட இவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மன்னார், சிலாவத்துறைக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்த இவர்கள் மன்னார் நோக்கி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது இடைமறித்து இவர்களை கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் கைக்குழந்தையொன்றும் அடங்குவதாகத் தெரிவித்த பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

http://kathiravan.com
பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தவேளை கலைந்தது அவுஸ்திரேலியக் கனவு! Reviewed by NEWMANNAR on October 10, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.